search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாலாண்டி அறிவுரை வழங்கி பேசினார்.
    X
    தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாலாண்டி அறிவுரை வழங்கி பேசினார்.

    ரவுடிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை

    திண்டுக்கல்லில் மறு வாழ்வுக்காக ரவுடிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை வழங்கினார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டராக பாலாண்டி கடந்த 1 வாரத்துக்கு முன்பு பதவியேற்றார். அப்போது முதல் 10க்கும் மேற்பட்ட கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய நபர்களை கைது செய்தார். இந்நிலையில் தாலுகா எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வந்த 25க்கும் மேற்பட்ட ரவுடிகளை வரவழைத்து அறிவுரை வழங்கினார்.

    அப்போது அவர் தெரிவிக்கையில், தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் கத்தி, அரிவாள், போதை வஸ்துகள் ஆகியவற்றை வைத்திருக்கவோ, வேறு யாரிடமும் கொடுத்து பதுக்கி வைக்கவோ கூடாது.

    நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்க கூடாது. குற்ற செயல்களில் ஈடுபடும் மனோபாவத்தை கைவிட்டு வேறு வேலைக்கு செல்ல வேண்டும். பொருளாதார ரீதியாக தொழில் தொடங்க ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் காவல் துறை நடவடிக்கை எடுக்கும். மனம் திருந்தி புதிய மனிதராக வாழ முயற்சி செய்யுங்கள் என்று தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர்கள் விஜய், ஜெய்கணேஷ், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×