என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  ரூ.18 கோடி மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழனியில் ஆயில் நிறுவனத்தில் ரூ.18 கோடி மோசடி செய்த ஊழியர்கள் கைது.
  பழனி:

  பழனி அருகே தாழையூத்து பகுதியில் தனியார் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பழனியை  சேர்ந்த சிவக்குமார் (வயது51). கரண்குமார் (31) ஆகியோர் உதவி மேலாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.

  கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தி திறன் குறைவாக இருப்பதாக பொய் கணக்கு காட்டி ரூ.18.50 கோடி மதிப்புள்ள 1600 டன் சமையல் எண்ணையை சிறிது சிறிதாக திருடி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்தனர்.

  இந்த நிலையில் நிறுவனத்தின் முதுநிலை துணைத்தலைவர் ஷியாம்சுந்தர் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டி.எஸ்.பி. இம்மானுவேல்சேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வினோதா மற்றும் போலீசார் சிவக்குமார் மற்றும் கரண்குமாரிடம் விசாரணை நடத்தினர்.

  இதில் 2 பேரும் மோசடி செய்தது கண்டுபிடிக் கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
  Next Story
  ×