என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மூடப்பட்ட ஆர்.வி.நகர் கந்தகோட்டம், அபிராமி அம்மன் கோவில்கள் முன்பு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்
  X
  மூடப்பட்ட ஆர்.வி.நகர் கந்தகோட்டம், அபிராமி அம்மன் கோவில்கள் முன்பு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்

  திண்டுக்கல்லில் களைஇழந்த கோவில்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல்லில் தைப்பூச நாளில் முருகன் கோவில் வாசல்களில் பக்தர்கள் வழிபட்டனர்
  திண்டுக்கல்:

  கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை கோவில்கள் அடைக்கப்படும்  என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

  இதனால் பொங்கல் பண்டிகை உள்பட முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு செல்லமுடியாமல் வீடுகளிலேயே வழிபாடு செய்தனர். இன்று தைப்பூச விழா முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து சென்று அடிவாரத்திலேயே வழிபாடு செய்தனர்.

  திண்டுக்கல் ஆர்.வி.நகர், கந்தகோட்டம், கோவிந்தாபுரம் முருகன்கோவில், ஒய்.எம்.ஆர்.பட்டி முருகன் கோவில், அபிராமி அம்மன் கோவில் ஆகிய கோவில்களிலும் தைப்பூச நாளில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து முருகனுக்கு அபிசேகம் செய்து வழிபடுவார்கள்.

  ஆனால் அனைத்து கோவில்களும் இன்று அடைக்கப்பட்டு இருந்ததால் கோவில் வாசல் முன்பு சூடம் ஏற்றியும், தீபம் ஏற்றியும் பக்தர்கள் வழிபட்டனர். இதே போல மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அடைக்கப்பட்ட கோவில் வாசல் முன்பு பக்தர்கள் மனமுருக வழிபட்டுச் சென்றனர்.

  நாளை முதல் கோவில்கள் திறக்கப்படும் என்பதால் அப்போது பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×