என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  நாகர்கோவில் அருகே பால் வெட்டும் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகர்கோவில் அருகே பால் வெட்டும் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  நாகர்கோவில்:

  நாகர்கோவில் குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் சதானந்தன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் தினேஷ்குமார் (வயது 43) இவருக்கு ஸ்ரீநித்யா (34) என்ற மனைவியும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் பால் வெட்டும் தொழில் செய்து வந்தார்.

  வெளியில் சிலரிடம் கடன் வாங்கியிருந்தார். அந்த கடனை அடைப்பதற்கு மங்கலம் இடைக்கட்டான்கால பகுதியில் உள்ள தனது தோட்டத்தின் ஒரு பகுதியை விற்பதற்கு ஏற்பாடு செய்தார். அந்த இடம் தணியார் காடு பகுதியில் உள்ளது. இதனால் அந்த இடத்தை விற்க முடியாமல் மன வேதனையில் இருந்தார்.

  இவரது மனைவி 2 நாட்களுக்கு முன் அவரின் பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். இதனால் தினேஷ்குமார் மட்டும் வீட்டில் இருந்தார். இன்று காலை இவரின் தந்தை டீ கொடுப்பதற்காக வீட்டிற்கு செல்லும் போது வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாக கிடந்தார். உடனே அவர் குலசேகரம் போலிசுக்கு தகவல் கொடுத்தார்.

  போலிசார் பினத்தை கைபற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×