என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வ.உ.சி.யின் கொள்ளு பேத்தி செல்வி.
  X
  வ.உ.சி.யின் கொள்ளு பேத்தி செல்வி.

  சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்தி நிராகரிப்பு- வேதனை தெரிவித்த வ.உ.சி. கொள்ளு பேத்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் மற்றும் தமிழக மக்களின் உணர்வுகளை வேதனை அடைய செய்துள்ளது.

  கோவில்பட்டி:

  குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் அலங்கார வாகன ஊர்தி நிராகரிப்பு செய்யப்பட்டதாக வந்த தகவலை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  இந்த பிரச்சினை தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழருமான வ.உ.சி.யின் கொள்ளு பேத்தி செல்வி கூறியதாவது:-

  இந்திய விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள், அவர்களது வரலாறுகளை பற்றி அடுத்த தலைமுறையினரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையிலும், தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாகவும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் விழாக்களில் நடைபெறும் அணிவகுப்பின் போது சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் வரலாறு அடங்கிய வாகன ஊர்திகள் ஆண்டாண்டு காலமாக இடம்பெற்று வருகிறது.

  ஆனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார் ஆகியோர் இடம் பெற்றிருந்த அலங்கார ஊர்தியை ஒன்றிய அரசு நிராகரிப்பு செய்துள்ளது.

  இது சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் மற்றும் தமிழக மக்களின் உணர்வுகளை வேதனை அடைய செய்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் ஒவ்வொரு தலைமுறைக்கும் தெரிய வேண்டியது அவசியம் என்பதால் ஒன்றிய அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதையும் படியுங்கள்... ராமர், கிருஷ்ணர் போன்ற கடவுளின் அவதாரம் பிரதமர் மோடி - சொல்கிறார் மத்திய பிரதேச மந்திரி

  Next Story
  ×