search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்த பனியன் நிறுவனம்.
    X
    தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்த பனியன் நிறுவனம்.

    2வது நாளாக போராட்டம் - திருப்பூரில் ரூ.400கோடி ஆடை உற்பத்தி முடக்கம்

    மாதந்தோறும் உயரும் நூல் விலையால் திருப்பூர் பின்னலாடைதுறை முழுமையாக முடங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
    திருப்பூர்:

    பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரி திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் 2 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதன் காரணமாக ரூ.400கோடி அளவுக்கு ஆடை உற்பத்தி முடங்கியுள்ளது.  

    இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது:

    மாதந்தோறும் உயரும் நூல் விலையால் திருப்பூர் பின்னலாடை துறை முழுமையாக முடங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. தொழில் நெருக்கடிகளை மத்தியஅரசுக்கு உணர்த்து வதற்காக 2 நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம்  நடக்கிறது.  

    ஏற்றுமதி, உள்நாட்டு ஆடை உற்பத்தி, ஜாப் ஒர்க் என பின்னலாடை சார்ந்த  15ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன. 2 நாள் போராட்டத்தால் ரூ.400 கோடி அளவுக்கு ஆடை உற்பத்தி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  

    வருகிற  25-ந்தேதி மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை குழுவாக சென்று நேரில் சந்திக்க உள்ளோம். மத்திய அரசு பஞ்சு, நூல், துணி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பஞ்சு மீதான 11சதவீத வரியை நீக்க வேண்டும். 

    உலகளாவிய வர்த்தகர்கள் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உள்பட மற்ற நாடுகளுக்கு ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் வழங்க ஆர்வம் காட்டுகின்றனர். 
      
    மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் குறுகிய காலத்திலேயே பின்னலாடை துறை அபார வளர்ச்சி அடையும். பல லட்சம் தொழிலாளர்கள் புதிதாக வேலைவாய்ப்பு பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×