search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.
    X
    நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

    நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை இன்று தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் நெல்லை உள்பட முக்கிய மாநகராட்சிகளில் சீர்மிகு நகர திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

    நெல்லை மாநகராட்சியில் மட்டும் சீர்மிகு நகர திட்டத்தின் மூலம் ரூ.950 கோடி அளவுக்கு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. 

    ரூ.78 கோடியில் நெல்லை சந்திப்பு பஸ்நிலையம், பொருட்காட்சி திடலில் வணிகவளாகம், டவுன் மார்க்கெட், நெல்லை புதிய பஸ்நிலைய பணிகள், பாளை பஸ்நிலையம் மற்றும் வணிகவளாகம், நேருஜீ கலை யரங்கம், வ.உ.சி. விளையாட்டு அரங்கம், புதிய குடிநீர் திட்டம், விரிவுபடுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் ஆகியவை சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் நடந்து வருகிறது. 

    இதில் நெல்லை புதிய பஸ்நிலைய பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு திறக்கப் பட்டுள்ளது. மற்ற பணிகள் முடி வடையும் தருவாயில் உள்ளது.

    நேற்று தூத்துக்குடியில் நடைபெற்று வரும் சீர்மிகு நகர திட்டம் குறித்து சிறப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தார்கள். 

    இந்த நிலையில் இன்று தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ்மீனா, தமிழக நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா ஆகியோர் இன்று நெல்லையில் நடைபெற்று வரும் சீர்மிகு நகர திட்டம் குறித்து திடீர் ஆய்வு செய்தனர்.

    அவர்களுடன் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். 

    இவர்கள் நெல்லை புதிய பஸ்நிலையம், பாளை பஸ் நிலையம், வ.உ.சி.விளையாட்டு அரங்கம், நெல்லை சந்திப்பு பஸ்நிலையம், ராமையன் பட்டியில் நடை பெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் ஆகியவற்றை நேரில் பார்த்து ஆய்வு செய்தனர்.

    மேலும் பணிகளை விரைவில் முடித்து திறக்கவும், நெல்லை மாநகராட்சி பகுதியில் மிகவும் மோசமான நிலையில் உள்ள சாலைப்பணிகளை சிறந்த தரத்துடன் அமைக்கவும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    ரூ.230 கோடியில் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ள அரியநாயகிபுரம் குடிநீர் திட்ட பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களுக்கு கூடுதல் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் உத்தரவிட்டார்.

    Next Story
    ×