என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  ஆலங்குளத்தில் பீடி கம்பெனி காண்டிராக்டர் திடீர் சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆலங்குளம் அருகே உள்ள கண்டபட்டியில் தங்கியிருந்து பீடி கம்பெனியில் காண்டிராக்டராக பணியாற்றி வந்த ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார்.
  நெல்லை:

  கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் அப்துல் ரசீத் (வயது59). இவர் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரில் தனியார் பீடி கம்பெனியில் காண்டிராக்ட ராக வேலை பார்த்து வந்தார். 

  இதனால் மனைவி மற்றும் மகள்களுடன் கண்ட பட்டியில் பீடி கம்பெனி நிறுவனத்திற்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார்.

  நேற்று வழக்கம் போல் கம்பெனிக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பிய அப்துல் ரசீத் திடீரென வீட்டில் சுருண்டு விழுந்தார். 

  உடனே அவரை முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

  இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×