என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  வீட்டின் கதவை உடைத்து ரூ.1.20 லட்சம் நகை திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.1.20 லட்சம் நகை திருட்டு போனது.
  தஞ்சாவூர்:

  தஞ்சை டி.பி.எஸ்.நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி ராதாகவுரி (வயது 21). இவர் தனது தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். 

  அப்போது வீட்டின் இரும்பு கேட் சேதமாகி உள்ளதாக இவருக்கு பக்கத்து 
  வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. 

  இதனை கேட்டு ராதாகவுரி பதறியடித்து கொண்டு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. 

  உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 
  10 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் காணவில்லை.

  அப்போது வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் 
  நகையை திருடி சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

  இது குறித்து ராதாகவுரி தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் 
  செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு 
  செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
  Next Story
  ×