என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாணவி பென்சி
  X
  மாணவி பென்சி

  நாகர்கோவில் அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகர்கோவில் அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
  நாகர்கோவில்:

  களியக்காவிளை அருகே கழுவன்திட்டை ஆர்.சி.தெரு  பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின். இவரது மகள் பென்சி (வயது 19) இவர் மார்த்தாண்டத்தில் தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

  பென்சி கல்வி கட்டணம் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

  இது குறித்து அக்கம்பக்கத்தினர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய மாணவி பென்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×