என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சனிக்கிழமை இரவு மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்
  X
  சனிக்கிழமை இரவு மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்

  மீன் மார்க்கெட்டில் படையெடுத்த மக்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊரடங்கு முதல் நாளில் திண்டுக்கல் மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு
  திண்டுக்கல்:

  தமிழகத்தில் இன்று 2வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர் விடுமுறையில் உள்ளதாலும், வெளியூர்களில் வேலைபார்த்தவர்கள் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு திரும்பியதாலும் மக்கள் பொங்கலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

  இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை எந்த கடைகளும் இருக்காது என்பதால் அசைவ பிரியர்கள் மீன் மற்றும் இறைச்சி வாங்க நேற்று குவியத் தொடங்கினர். பல்வேறு பகுதிகளில் சாலையோரம் திடீர் மீன் கடைகளும் முளைக்கத் தொடங்கின.

  அங்கு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர். இதே போல சிக்கன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மாலை 6 மணிவரை மட்டுமே இயங்கும் கடைகள் இரவு 9 மணியைக் கடந்தும் செயல்பட்டதால் அங்கு போலீசார் வந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.
  Next Story
  ×