search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருச்சியில் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 82 ஆயிரத்தை தாண்டியது

    திருச்சியை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருச்சி:

    தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 2 வார காலமாக தினசரி பாதிப்பு ஆயிரக்கணக்கில் சென்று கொண்டிருக்கிறது. திருச்சி மாவட்டத்திலும் நாள் ஒன்றுக்கு 400-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

    நேற்றைய பரிசோதனை முடிவில் திருச்சியில் 443 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை கடந்துவிட்டது.

    திருச்சியை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் வைர சின் தாக்கம் உச்சம் தொட் டுள்ளது.

    அதிகபட்சமாக தஞ்சாவூ ரில் நேற்று ஒரே நாளில் 443 பேருக்கு தொற்று உறு தியாகியுள்ளது. நாகப்பட்டி னத்தில் 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. திருவாரூரில் 73 பேருக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 71 பேருக்கும், கரூரில் 76 நபர்களுக்கும், அரியலூரில் 72 பேருக்கும், பெரம்பலூரில் 68 பேருக்கும் தொற்று உறுதியானது.

    தஞ்சாவூரில் ஒரு சில இடங்கள் நோய் கட்டுப் பாட்டு பகுதியாக அறிவிக் கப்பட்டு தடை செய்யப்பட் டுள்ளது. அப்பகுதியில் விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

    திருச்சியை பொறுத்தமட் டில் கடந்த டிசம்பர் மாதம் அதிகபட்சமாக 13 பேர் மட் டுமே தொற்றால் பாதிக்கப் பட்டு இருந்தனர். ஆனால் தற்போது தினசரி பாதிப்பு 400-ஐ கடந்து சென்று கொண்டிருப்பது சுகாதாரத் துறையினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாவட் டம் முழுவதும் 2,970 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சுகாதாரத்துறை விதி மீறல்கள் அதிகரித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். பொங்கல் பண்டிகை தினத்தில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடி யவர்கள், சமூக இடைவெ ளியை பின்பற்றாமை போன்ற காரணங்களுக்காக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் திருச்சி மாநகரில் மட்டும் 597 விதிமீறல் வழக் குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. மேலும் ரூ.2.98 லட் சம் அபராதமாக வசூலிக்கப் பட்டது. இதில் பெரும்பாலான வழக்குகள் முகக்கவசம் அணியாதவர்கள் மீதே பதிவாகியுள்ளது. சுகாதா ரத்துறை வழிகாட்டுதல் களை பின்பற்றி கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துகொள் ளுமாறும், தகுதியானவர் கள் உடனே தடுப்பூசி போட் டுக்கொள்ளுமாறும் கலெக் டர்கள் கேட்டுக்கொண்டுள் ளனர்.

    Next Story
    ×