search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை - தமிழக அரசு

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    சென்னை:

    கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.
     
    இதற்கிடையே, இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம் என ஐகோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    இந்நிலையில், அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.

    மேலும், ஜனவரி 19-ம் தேதி தொடங்கவிருந்த 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    Next Story
    ×