search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா
    X
    கொரோனா

    மதுரையில் கொரோனா பாதித்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

    மதுரையில் கொரோன தொற்று பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் ஏராளமானோர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். இதன் மூலம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
    மதுரை

    தமிழகம் முழுவதிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் நோய் பாதித்தோரின் எண்ணிக்கை கடகடவென அதிகரிக்க தொடங்கியது.

    கடந்த 6-ந் தேதி 60, 7-ந்தேதி 149, 8-ந் தேதி 314, 9-ந் தேதி 348, 10-ந் தேதி 330, 11-ந் தேதி 512, 12-ந் தேதி   498,  13-ந் தேதி 599, 14-ந் தேதி 631, 15-ந் தேதி 550 என்ற விகிதத்தில் நோய்  தொற்று பாதிப்பு உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய்  தொற்று பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அங்கு டாக்டர்கள் இரவு பகலாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோரின் எண்ணிக்கையும் நேற்று முதல் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    மதுரையில் நேற்று நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 550 ஆக இருந்தது. அதே வேளையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது. நடப்பு மாதத்துடன் ஒப்பிடுகையில், டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 320-ஐ தாண்டுவது இதுவே முதல் முறை.

    மதுரை மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி 5, 7-ம் தேதி 12, 8-ம் தேதி 13, 9-ம் தேதி 26, 10-ம் தேதி 36, 11-ம் தேதி 41, 12-ம் தேதி 52, 13-ம் தேதி 61, 14-ம் தேதி 96 என்ற எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உள்ளது.

    இருந்தபோதிலும் கொரோனா பாதிப்பு இன்னமும் குறையவில்லை. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், 2 டோஸ் தடுப்பூசி மருந்தை செலுத்தி கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்ட அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் இதுவரை 3480 பேர் நோய் பாதிப்புடன் உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    Next Story
    ×