என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  சேலத்தில் பட்டதாரி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மது குடித்ததை தாய் கண்டித்ததால் பட்டதாரி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
  சேலம்:

  சேலம் சூரமங்கலம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 32). என்ஜினியரிங் படிப்பு முடித்துள்ள இவர் வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு  மது குடிக்கும் பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று நண்பர்களை அழைத்து வந்து வீட்டிலேயே மது குடித்ததாக கூறப்படுகிறது.

  இதனை அவரது தாயார் தங்கரத்தினம் கண்டித்துள்ளார். மேலும் மகனிடம் கோபித்துக்கொண்டு தங்கரத்தினம் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் கார்த்திக்கேயன் மன வேதனையில் இருந்தார். இந்த நிலையில் கார்த்திகேயன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

  இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சூரமங்கலம் போலீசாருக்கும் தங்கரத்தினத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் கார்த்திக்கேயன் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

  அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்து போலீசார் கார்த்திகேயன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
  Next Story
  ×