என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோட்டார் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.
  X
  கோட்டார் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

  கன்னியாகுமரியில் கடைகள் அடைப்பு: சாலைகள் வெறிச்சோடியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கன்னியாகுமரியில் கடைகள் அடைப்பு: சாலைகள் வெறிச்சோடியது.
  கன்னியாகுமரி:

  குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கையடுத்து இன்று பஸ்கள் ஓடவில்லை, கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
  10-DSC_2391OK 

  நாகர் கோவில் நகரின் கோட்டார், கம்பளம், மீனாட்சிபுரம் உள்பட அனைத்து பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. கேப் ரோடு, அசம்பு ரோடு, மீனாட்சிபுரம் சாலை உள்பட அனைத்து சாலைகளும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்கள் இயக்கப்படாததால் வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் வெறிச்சோடியது. நாகர் கோவில் நகரில் உள்ள உணவகங்கள் டீக்கடைகளில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது.
  10-DSC_2383OK
  மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்பட்டது. பெட்ரோல் பங்குகளும் திறந்து இருந்தது. செட்டிகுளம் சந்திப்பு, வடசேரி சந்திப்பு, சவேரியார் கோவில் சந்திப்பு, பார்வதிபுரம், கலெக்டர் அலுவலகம் பகுதிகளில் போலீசார் சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினார்கள்.

  இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் அவசர தேவைக்கு சென்றால் மட்டும் அவர்களுக்கு அனுமதி அளித்தனர். காலை நேரங்களில் ஒரு சிலர் கார்களில் வந்தனர். கார்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
  10-DSC_2533OK
  சென்னை, கோவை போன்ற வெளியூர்களில் இருந்து நேற்று புறப்பட்ட ரெயல்கள் இன்று காலை நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் வந்து சேர்ந்தது. ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் வீடுகளுக்கு செல்ல பஸ் வசதி இல்லாமல் அவதிக்கு உள்ளானார்கள்.

   ஒரு சில பயணிகள் ரெயில் நிலையத்தில் இருந்து நடந்தே தங்கள் வீடுகளுக்கு சென்றனர். பெரும்பாலானோர் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.

  மார்த்தாண்டம், குளச்சல், தக்கலை, அருமனை, இரணியல், அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி உட்பட அனைத்து பகுதிகளிலும் இன்று கடைகள் அடைக்கப் பட்டு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

  களியக்காவிளை, அஞ்சு கிராமம், ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். மருத்துவமனைகளுக்கு செல்பவர்களுக்கு மட்டும் போலீசார் அனுமதி அளித்தனர்.

  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 55 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.  முழு ஊரடங்கு காரண மாக பொதுமக்கள் அனை வரும் வீட்டிலேயே முடங்கினார்கள். இன்றைய பொ ழுதை தங்களது குடும்பத்தினருடன் கழித்தனர்.

  காணும் பொங்கலையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் வழக்கமாக புதுமணத் தம்பதியினர் பொதுமக்கள் ஏராளமானோர் குவிவது வழக்கம். இன்று முழு ஊரடங்கு என்பதால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா தலங் களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
  Next Story
  ×