என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
  X
  கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

  திருப்பூர் நிட்டிங் நிறுவனத்தில் ரூ.4 லட்சம் நூல் திருடிய 5 பேர் சிறையில் அடைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடோனில் அடுக்கி வைத்திருந்த 60 கிலோ எடை கொண்ட 16 நூல் பை மூட்டை காணாமல் போனது தெரியவந்தது.
  திருப்பூர்:

  திருப்பூர் நிட்டிங் நிறுவனத்தில் ரூ.4 லட்சம் நூல் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நூல் திருட்டு தாராபுரம் புங்கன் துறை பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் வயது (வயது 40). இவர் திருப்பூர் மணியகாரம்பாளையம் வி.எஸ். ஏ.நகர் அருகே நிட்டிங் என்ற பேப்ரிகேஷன் நிறுவனம் நடத்தி வருகிறார். 

  இவரது நிறுவனத்தில் 6 மாதங்களாக பவானி நகரை சேர்ந்த சண்முக சுந்தர் (50) பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி காலை நிறுவனத்திற்கு வழக்கம் போல ரத்தினம் வந்துள்ளார். அப்போது குடோனில் அடுக்கி வைத்திருந்த 60 கிலோ எடை கொண்ட 16 நூல் பை மூட்டை காணாமல் போனது தெரியவந்தது. அதன் எடை 960 கிலோ ஆகும். 

  இது குறித்து நல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 

  மேலும் அங் குள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். 5 பேர் கைது சம்பவத்தன்று அதில் அதிகாலை 3.30 மணிக்கு கேமராவை அணைத்துவிட்டு ஆட்டோவில் நூல்பைகளை சண்முக சுந்தர் ஏற்றி அனுப்பி வைத்தது பதிவாகி இருந்தது. இதையடுத்து சண்முக சுந்தரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

  விசாரணையில் சண்முகசுந்தருடன், கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா சேர்வைகாரன் பட்டி தறிவாசல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (34), அதே பகு தியை சேர்ந்த வரதராஜ் (28), திருப்பூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த பிரசாத் (28), அதே பகுதியை சேர்ந்த ராமராஜ் (32) ஆகிய 5 பேர் சேர்ந்து நூல்பை திருடியது தெரியவந்தது. 

  இதையடுத்து போலீசார் இவர்கள் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள 960 கிலோ நூல், திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

  Next Story
  ×