search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்.கணேசன் தலைமையில் கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம். அருகில் ரோட்டரி உறுப்பினர் சேர்க்கை சேர்மன் கே.சீனிவாசன்
    X
    ஆர்.கணேசன் தலைமையில் கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம். அருகில் ரோட்டரி உறுப்பினர் சேர்க்கை சேர்மன் கே.சீனிவாசன்

    பொங்கல் பண்டிகை சிறப்பு கூட்டம்

    திருச்சி ரோட்டரி சங்க பொங்கல் விழா சிறப்பு கூட்டத்தில் 100 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


    திருச்சி:

    திருச்சிராப்பள்ளி கிங்ஸ் ரோட்டரி சங்க பொங்கல் சிறப்பு கூட்டம் தென்னூரில் நடந்தது. சங்கத்தின் தலைவர் ஆர்.கணேசன்தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறும்போது, இந்த சங்கம் சார்பில் கொரோனா காலங்களில் உணவின்றி தவித்த சுமார் 100 குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான அரிசி மற்றும் சமையல் பொருட்கவைழங்கியுள்ளோம்.

    சுற்றுச்சூழலை பாதுகாக்க சாத்தனூரில் 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. வருங்கால ஆளுநர் ஜெரால்டு தலைமையில் திருச்சி சின்ன சூரியூரில் போட்டி தேர்வுகளில் கிராமப்புற இளைஞர்களை தயார் செய்ய ரூ.10 லட்சம் மதிப்பிலான நூலகத்தை திறக்க உள்ளோம் என்றார்.

    பின்னர் ரோட்டரி முன்னாள் ஆளுநரும், மண்டல உறுப்பினர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் சுந்தர்ராஜன் அறிவுறுத்தலின் பேரில் ரோட்டரி 3000 மாவட்ட உறுப்பினர் சேர்க்கை சேர்மன் கே.சீனிவாசன் வாழ்த்துரை வழங்கி பேசியதாவது:&

    உலகில் 12 லட்சமாக இருக்கும் ரோட்டரி உறுப்பினர்கள் எண்ணிக்கை வருகிற  ஜூன் மாதத்திற்குள் 13 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு ஒவ்வொரு உறுப்பினரும் புதிய உறுப்பினர் ஒருவரை சேர்க்கவேண்டும். அவர்கள் நண்பர்களாக, சொந்தங்களாக இருக்கலாம்.  

    பெண்கள், ரோட்டரி பயனாளிகள் ஆகியோரையும் சேர்க்க வேண்டும். அனைத்து துறைகளிலும் சரிநிகர் பொறுப்புகளை நோக்கி நகர்ந்துள்ள பெண்கள், நமது சங்கத்தின் 4 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர்.

    இதனை 25 சதவீதமாக உயர்த்தவும், இளைஞர்களை ஈர்க்கவும் நவீன டெக்னாலஜிகளை பயன்படுத்திட வேண்டும் என்றார்.
    விழாவில் நிர்வாக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் செந்தில்குமார், வருங்கால தலைவர் காட்சன் முகமது, வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×