என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  செங்கோட்டையில் மரத்தில் தூக்குப்போட்டு என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் என்ஜினீயரிங் மாணவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புளியரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  நெல்லை:

  தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை அருகே உள்ள கற்குடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் வீரபாண்டியன். இவரது மகன் சுரேஷ் சுப்பிரமணியன்(வயது 19).

  இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2&ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

  வீரபாண்டியனுக்கு சொந்தமான கோழிப்பண்ணை கற்குடி&அச்சன்புதூர் சாலையில் உள்ளது. நேற்று ஒரு திருமன நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டி இருந்ததால் கோழிப்பண்ணையை பார்த்து கொள்ளுமாறு சுரேசிடம் கூறிவிட்டு, வீரபாண்டியன் தனது மனைவியுடன் சென்றுவிட்டார்.

  மாலையில் வீட்டுக்கு வந்த அவர் கோழிப்பண்ணைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பலா மரத்தில் சுரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தொங்கினார்.

  தகவல் அறிந்த புளியரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சுரேஷ் சுப்பிரமணியன் எப்போதும் செல்போனில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்றும் கோழிப் பண்ணையில் செல்போனையே கையில் வைத்துக்கொண்டு இருந்துள்ளார்.

  கோபம் அடைந்த வீரபாண்டியன், செல்போனை பிடுங்கி சென்றதாக தெரிகிறது. இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


  Next Story
  ×