என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சிகிச்சையை விளக்கும் டாக்டர்
  X
  சிகிச்சையை விளக்கும் டாக்டர்

  தமிழகத்தில் மேலும் 23989 பேருக்கு கொரோனா பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசுக்கு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
  சென்னை:

  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 23,459 ஆக பதிவாகி இருந்தது.

  இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தொற்று பாதிப்பு 23,989 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: 

  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்து 15 ஆயிரத்து 948 ஆக உயர்ந்துள்ளது. 

  கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 10,988 பேர் மீண்டுள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 36,967 ஆக அதிகரித்துள்ளது. 

  தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மேலும் 9,026 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 1.31 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
   
  கொரோனா தொற்றை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1,43,536 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

  சென்னையில் மட்டும் ஒருநாள் பாதிப்பு 8,978 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 8,963 ஆக இருந்த பாதிப்பு 8,978 ஆக உயர்ந்துள்ளது.

  Next Story
  ×