என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  கன்னியாகுமரி மாவட்டத்தில் 95 சதவீத மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கன்னியாகுமரி மாவட்டத்தில் 95 சதவீத மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
  நாகர்கோவில்:

  குமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  மாவட்டம் முழுவதும் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசியை செலுத்தி வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் இதுவரை 18 ஆயிரத்து 784 கர்ப்பிணிகளுக்கும், 18268 பாலூட்டும் தாய்மார்களுக்கும், 70 ஆயிரத்து 932 இதர நோயாளிகளுக்கு என மொத்தம் 11 லட்சத்து 92 ஆயிரத்து 285 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 9 லட்சத்து 9 ஆயிரத்து 138 பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 

  மீதமுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையினரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வசதியாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 

  ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது பூஸ்டர் ஊசி போடும் பணியும் நடந்து வருகிறது.  முதற்கட்டமாக 26 ஆயிரத்து 500 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

  15 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் தற்போதைய கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள 475 பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் 74 ஆயிரத்து 655 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

  இதுவரை 71 ஆயிரத்து 617 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுமார் 95 சதவீதம் பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத் துறையும் பள்ளி நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
  Next Story
  ×