என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சேலத்தில் ஒரு வீட்டில் மாட்டுப்பொங்கல் கொண்டாடபப்ட்ட காட்சி.
  X
  சேலத்தில் ஒரு வீட்டில் மாட்டுப்பொங்கல் கொண்டாடபப்ட்ட காட்சி.

  சேலத்தில் மாட்டுப்பொங்கல் கோலாகலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் இன்று மாட்டுப்பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
  சேலம்:

  தைத் திருநாளான தமிழர் திருநாள் பொங்கல் விழா தமிழகத்தில் 4 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் இன்று மாட்டுப் பொங்கலையொட்டி விவசாயிகள் அதிகாலையிலேயே எழுந்து பசு மாடுகளை நன்றாக  குளிப்பாட்டி சுத்தம் செய்து மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணங்கள் பூசினர்.

  பின்னர் ரிப்பன்கள், கலர் காகிதங்களை கட்டியும், சலங்கைகளுடன் கூடிய புதிய கயிறுகளை கட்டியும் அலங்கரித்தனர்.  அதனையடுத்து விவசாயிகளின் குடும்பத்தினர் அனைவரும்  ஒன்றிணைந்து புதிய மண்பானையில் பச்சரிசி சர்க்கரை பொங்கல் வைத்தும் சூரிய பகவானை நோக்கி கரும்புகளை கட்டி பந்தல் அமைத்தனர். 

  பந்தலை சுற்றிலும் வேப்பிலை, ஆவாரம்பூ, பூளை பூக்களை கொண்டும் மற்றும் மஞ்சள் கிழங்கூடன் கூடிய செடிகளை கட்டியும் அலங்கரித்தனர்.

  பின்னர் அலங்கரிக்கப்பட்ட பந்தலுக்கு கீழே மாட்டு சாணத்தில் தெப்பகுளம் கட்டி சாணத்தில் பிள்ளையார் பிடித்து  வைத்து வாழை இலைகளை படையலிட்டு  குடும்பத்துடன் மாடுகளை வணங்கினர்.

   பூஜைகள் முடிந்த பின்னர் விவசாயிகள்  குடும்பத்துடன் மாடுகளுக்கு பொங்கல், வாழைப்பழங்களை கொடுத்து  பொங்கலோ பொங்கல் என்று சப்தமிட்டு மாட்டுப்பொங்கலை கொண்டாடினர்.  
  Next Story
  ×