search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன் கடை
    X
    மீன் கடை

    கோவையில் மீன் கடைகளில் குவிந்த மக்கள்

    நாளை முழு ஊரடங்கால் இன்று கோவை மீன் மார்க்கெட்டில் மக்கள் அதிகளவில் திரண்டு இருந்தனர்.
    கோவை:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடைகள் உடுத்தி வீடுகளில் பொங்கலிட்டு கடவுளுக்கு படையலிட்டு வணங்கினர். 

    இதேபோன்று தனியார் நிர்வனங்கள் அலுவலகங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் அங்கு பொங்கலிட்டு பொங்கல் விழாவை கொண்டாடினர்.பொங்கலின் 2-வது நாளான இன்று மாட்டுப் பொங்கல் விழா  கொண்டாடப்பட்டது. 

    அதற்காக வீடுகளில் மாடுகளை வைத்து வளர்த்து வருபவர்கள் தங்கள் மாடுகளை காலையி லேயே குளிப்பாட்டி கொம்பு களுக்கு வர்ணம்  மாடுகளுக்கு தேவையாக புதுகயிறு, மாலைகள்அணிவித்து பூஜைகள் செய்தனர். பின்னர் பொங்கல் வைத்து மாடுக ளுக்கு கொடுத்து மகிழ்ந்து வணங்கினர். 

    நாளை   ஊரடங்கு என்ப தால் கோவையில் உள்ள அனைத்து மளிகைக் கடைகள், காய்கறி கடை களில் பொருட்கள் வாங்க  காலை முதலே மக்கள் குவிந்தனர். கோவை தியாகி குமரன் மார்க்கெட் மற்றும் சிங்காநல்லூர், ஆர்.எஸ் புரம், சுதந்திரா புரம், வடவள்ளி உள்பட  உழவர் சந்தைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. நேரம் ஆக, ஆக காய்கறி கடைகள் மட்டுமல்லாமல் மளிகைக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்தது. 

    இன்று திருவள்ளுவர் தினம் என்பதாலும்,  நாளை ஊரடங்கு என்பதாலும்  இறைச்சி கடைகளுக்கு விடுமுறை அளிக்க பட்டுள்ளது. இதனால் மீன் வாங்கு வதற்காக மக்கள் உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு குவிந்தனர். அவர்களை வியாபாரிகள் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி அறிவுறுத்தினர்.

    கோழி முட்டையும் அதிக ளவு விற்பனை ஆனது. சிலர் நேற்றே இறைச்சியை வாங்கி வைத்துக்கொண்டனர். இறைச்சிக் கடைகள் இல்லாததால் மீன் கடைகளை நோக்கி மக்கள்  படையெடுத்தனர். 

    கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக  கண் காணித்தது. முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கி செல்ல ஒலிபெருக்கியில் அறிவுறுத்தினர். இதனால் நேற்று வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள் இன்று பரபரப்பாக   காணப்பட்டது.

    Next Story
    ×