என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு சக்கரை பொங்கல், கரும்பு வைத்து பூஜை.
  X
  திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு சக்கரை பொங்கல், கரும்பு வைத்து பூஜை.

  திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு பாரம்பரியமாக சிறப்பு பூஜை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு பாரம்பரியமாக மண் பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
  திருப்பரங்குன்றம்

  திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளன்று மூலஸ் தானத்தில் உள்ள மூலவர் முருகப்பெருமானுக்கு பாரம்பரியமுறைப்படி மண் பானையில் பொங்கல் கரும்பு வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம். 

  இந்த ஆண்டு நேற்று தைப் பொங்கலை முன்னிட்டு மூலஸ்தானத்தில் உள்ள முருகப்பெருமான், கற்பக விநாயகர், சத்திய கீரீஸ்வரர், துர்க்கை, பவளக்கனிவாய்பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் 5 மண் பானைகளில் பொங்கல், கரும்பு வைத்து சிறப்பு தீப தூப, ஆராதனைகள் செய்யப்பட்டது. 

  தொடர்ந்து உற்சவர் சன்னதியில் உள்ள முருகன் தெய்வானைக்கும் 5 மண்பானை பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. 

  இதேபோல கோவர்தனாம்பிகை, அன்னபூரணி, நடராஜர், தட்சிணாமூர்த்தி, சண்முகர், 63 நாயன்மார்கள், பஞ்சலிங்கம், செந்தில்ஆண்டவர், சனீஸ்வரர், ஜூரதேவர் உள்ளிட்ட கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சிறிய மண் பானைகளில் பொங்கல் கரும்பு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
  Next Story
  ×