என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கரை ஒதுங்கிய கடல் ஆமை
  X
  கரை ஒதுங்கிய கடல் ஆமை

  கன்னியாகுமரி கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத கடல் ஆமை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கன்னியாகுமரி கடற்கரையில் இறந்த நிலையில் ராட்சத கடல் ஆமை கரை ஒதுங்கியது
  கன்னியாகுமரி:

  கன்னியாகுமரி வாவத்துறை தூண்டில் வளைவு கடற்கரை பகுதியில் ராட்சத கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இதனை அந்த பகுதியில் ரோந்து சென்ற கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கண்டுபிடித்தனர். 

  பின்னர் அவர்கள் இதுபற்றி பூதப்பாண்டி வனச்சரக அலுவகத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனச்சரகர் திலீபன் உத்தரவு படி மருந்துவாழ் மலை வனக் காப்பாளர் பிரபாகர், வனக் காவலர் ஜோயல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கப்பலில் அடிபட்டு இறந்த நிலையில் அழுகியபடி இருந்த ராட்சத கடல் ஆமையினை கைப்பற்றினார்கள். 

  பின்னர் அந்த ராட்சத கடல் ஆமை வாரியூர் கால்நடை மருத்துவரால் உடற்கூறு ஆய்வு செய்து மணலில் புதைக்கப்பட்டது.

  Next Story
  ×