search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சொகுசு காரில் வந்து பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கேரள வாலிபர்

    சொகுசு காரில் வந்து பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    கன்னியாகுமரி:

    குளச்சல், மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு பகுதிகளில் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு   பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், குளச்சல் டி.எஸ்.பி தங்கராமன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

    இந்த நிலையில் நேற்று தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்  ஜாண் போஸ்கோ தலைமையிலான தனிப்படை  மற்றும் மண்டைக்காடு போலீசார் மண்டைக்காடு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்தவழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு காரை தடுத்துநிறுத்தி விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் காரை ஓட்டி வந்த வாலிபர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் திருவிச்சிவிளை வீடு வெளியன் கோட்டை கோணம் பகுதியை சார்ந்த செல்வராஜ் மகன் அஸ்வின் (வயது 29) என்பது என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அஸ்வின் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.  

    இதனையடுத்து போலீசார் அவரை மண்டைக்காடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர் கேரள மாநிலத்தில் இருந்து   குளச்சல் மற்றும்   மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி போன்ற பகுதிகளுக்கு வந்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாக ஒப்புக்கொண்டார்.

     மேலும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் மண்டைக்காடு புதூர் பகுதிகளில் ஒன்றான சி.ஆர்.எஸ் நகரில் வைத்து ஜோசப் அன்றணி என்பவரின் மனைவியான மஜோரா (45) என்பவரின் கழுத்திலிருந்த 9 பவுன் தங்கச்சங்கிலியை வழிப்பறி செய்ததும், அதேபோல் மணவாளக்குறிச்சி பகுதியில் 6 பவுன் தங்க நகையை வழிப்பறி செய்ததாகவும் ஆக மொத்தம் 15 பவுன் தங்க நகைகளை பறித்தகாக  தெரிவித்தார். 

    இதையடுத்து மண்டைக்காடு போலீசார் அஸ்வின் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×