என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயமானார்.
  நாகர்கோவில்:

  ஆசாரிப்பள்ளம் அருகே மேலபெருவிளை சுடலை மாடன் தெருவை சேர்ந்தவர் ராஜன் என்ற டேவிட். இவரது மனைவி பாரதி (வயது 28). சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பாரதிக்கும் ராஜனுக்கும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடைபெற்றது.

  இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு குழந்தை உள்ளது. பாரதி சென்னை பரங்கிமலையை சேர்ந்தவர். 12-ம் வகுப்பு முடித்த இவர் தனது கணவருடன் மேல பெருவிளையில் வசித்து வந்தார். அவரது கணவர் கடந்த 3-ந்தேதி சபரிமலைக்கு சென்று வீடு திரும்பினார். 

  தனது தாய் வீட்டுக்கு சென்ற பாரதி 3-ந்தேதி சென்னையில் இருந்து மேல பெருவிளை வந்தார். வந்தவர் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.  அவரது உறவினர்கள் வீட்டிலும் சென்னையில் உள்ள தாயார் வீட்டிலும் தேடியும் பாரதியை கண்டு பிடிக்க முடியவில்லை. 

  இதனால் பதட்டமடைந்த ராஜன் ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து பாரதியை தேடி வருகிறார். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மேல் விசாரணை செய்து வருகிறார்.
  Next Story
  ×