என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அனுமதி மறுப்பால் வெறிச்சோடிக் காணப்படும் தஞ்சை மணிமண்டப பூங்கா.
  X
  அனுமதி மறுப்பால் வெறிச்சோடிக் காணப்படும் தஞ்சை மணிமண்டப பூங்கா.

  தொடர் விடுமுறையிலும் களை இழந்த தஞ்சை மணிமண்டப பூங்கா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொடர் விடுமுறையிலும் தஞ்சை மணிமண்டப பூங்கா களை இழந்தது.
  தஞ்சாவூர்:

  தமிழகத்தில் கொரோனா 3-வது அலையால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா முழு ஊரடங்கு, வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை என்று பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

  கொரோனா முதல் அலை தொடங்கிய நாளில் இருந்தே பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டன. பிறகு ஓரளவு மீண்டு வந்த நிலையில் 2-வது அலை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்திவிட்டன. 

  தற்போது 3-வது அலை தொடங்கியதில் இருந்து மீண்டும் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரின் இயல்பு வாழ்க்கை பாதிக்க தொடங்கிவிட்டது. பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில் சுற்றுலா தொழிலையும் கொரோனா புரட்டி போட்டுவிட்டது.

  கொரோனா ஊரடங்கால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மறு உத்தரவு வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தஞ்சையில் புகழ்பெற்ற மணிமண்டப பூங்கா மூடப்பட்டுள்ளது. தினமும் இங்கு ஏராளமானோர் வந்து பொழுதைபோக்கி செல்வர். 

  விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிக அளவில் காணப்படும். சிறுவர்கள் விளையாட அனைத்து விதமான விளையாட்டு உபகரண வசதிகளும் இங்கு அமைந்திருப்பதால் பல பெற்றோர் தங்களது 
  பிள்ளைகளை அழைத்து வருவர். 

  தற்போது ஊரடங்கால் இந்த பூங்கா மூடப்பட்டுள்ளதால்  தொடர் விடுமுறை நாளாக இருந்தும்  பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது. 

  பொதுமக்கள் வருகை இல்லாததால் மணி மண்டப பூங்காவை நம்பி பிழைப்பு நடத்தி வரும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றுலா தலங்களை முன்பு போல செயல்பட செய்யவேண்டும். 

  கொரோனா விதிமுறைகளை அமல்படுத்துவதோடு சில எளிமையான கட்டுப்பாடுகள் மூலம், சுற்றுலா தலங்களை செயல்பட செய்ய வேண்டும் என்று சுற்றுலா தொழிலை நம்பியுள்ள அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Next Story
  ×