என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீடாமங்கலத்தில் தாலிக்குதங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பயனாளிகள் 489 பேருக்கு தாலிக்குத் தங்கம்
மன்னார்குடி, நீடாமங்கலத்தில் பயனாளிகள் 489 பேருக்கு தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில்
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்குத்தங்கம் வழங்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது.
வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ, தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியினை வழங்கி கூறியதாவது:&
இத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12-ம் வகுப்பு வரை படித்த ஏழைப்பெண்களுக்கு 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.25,000 திருமண நிதியுதவியும், பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு வரை படித்துமுடித்த ஏழைபெண்களுக்கு 8 கிராம் தாலிக்குதங்கம் மற்றும் ரூ.50,000 திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம் ஒன்றியத்தில் 489 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 92 லட்சத்து 65 ஆயிரத்து 452 மதிப்பில் திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்குதங்கம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, வருவாய் துறையின் சார்பில் 77 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டது. அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தமிழக முதலமைச்சர் இந்திய அளவில் முன்னோடி முதல்வராக திகழ்ந்து வருகிறார்.
அரசின் திட்டங்களை கடைகோடி பகுதி மக்களும் பெற்று பயனடைகிற வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கார்த்திகா, ஒன்றியக்குழுத் தலைவர்கள் நீடாமங்கலம் செந்தமிழ்செல்வன், மன்னார்குடி மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story