search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.
    X
    திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.

    திருவாரூர் மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்-திருவாரூர் கலெக்டர் தகவல்

    திருவாரூர் மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று திருவாரூர் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் 2022-23-ம் கல்வியாண்டிற்கு 3.1.22 முதல் புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல் தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.
     
    2022-23-ம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி, 
    ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்கவேண்டும். 

    தொழிற்பள்ளி விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் செலுத்தும் போது தொழிற்பள்ளியின் வங்கி கணக்கில் இருந்து பறிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

    விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக்  கட்டணம் எந்த தொழிற் பள்ளிக்காக செலுத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிய ஏதுவாக, தாளாளர் பெயரில் உள்ள வங்கி கணக்கிலிருந்து மூலம் செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.

    விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற்பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம், ஆய்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.4.22 ஆகும். இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம், திருச்சி என்ற முகவரிக்கு தொலைபேசி எண் 0431-2422171 மற்றும் ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம். 

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×