என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  தர்மபுரி அருகே பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தர்மபுரி அருகே சிறுகனூர் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  தருமபுரி:

  தருமபுரி மாவட்டம் சிறுகனூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. மின்வாரிய ஊழியர்.  இவரது 2-வது மகன் நித்திஷ் (வயது 17). தருமபுரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

  இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் படிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் நித்திஷ், வெளியே வராததால் அவரது பெற்றோர் பதட்டம் அடைந்தார். உடனே கதவை திறந்து பார்த்தபோது நித்திஷ், தூக்கில் பிணமாக தொங்கினார்.

  இதைபார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து இண்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

  பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×