search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் தொற்று பாதிக்கப்பட்டவர் வீட்டுக்கு பிளீச்சிங் பவுடர் தூவப்பட்ட காட்சி.
    X
    நெல்லையில் தொற்று பாதிக்கப்பட்டவர் வீட்டுக்கு பிளீச்சிங் பவுடர் தூவப்பட்ட காட்சி.

    நெல்லையில் இன்று 188 பேருக்கு கொரோனா

    நெல்லை மாவட்டத்தில் இன்று 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
    நெல்லை:

    தொடர் பண்டிகை காரணமாக நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.

    தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதால் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று வெளியான பரிசோதனை முடிவில் 188 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் மாநகர பகுதியில் மட்டும் 110 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுதவிர ராதாபுரத்தில் 22 பேருக்கும், வள்ளியூரில் 20 பேருக்கும், பாளையில் 13 பேருக்கும், மானூரில் 9 பேருக்கும், அம்பையில் 7 பேருக்கும், நாங்குநேரி, சேரன்மகாதேவி, களக்காட்டில் தலா 2 பேருக்கும், பாப்பாக்குடியில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

    தொற்று பாதித்தவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்று தொற்று பாதிக்கப்பட்டவர்களில் டாக்டர்கள், போலீஸ்காரர்களும் அடங்குவர்.

    நேற்று ஒரே நாளில் நெல்லையில் கொரோனாவுக்கு பெண் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். சேரன்மகாதேவி மற்றும் தேவர்குளத்தை சேர்ந்த 2 ஆண்கள், பாளை கே.டி.சி .நகரை சேர்ந்த பெண் ஆகியோர் இறந்துள்ளனர். 

    மாநகர பகுதியில் அதிக அளவு பாதிப்பு இருப்பதால் நிலவேம்பு குடிநீர் வழங்குதல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. 

    மேலும் பஸ் நிலையத்தில் வரும் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கமிஷனர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் ராஜேந்தின் மேற்பார்வையில் சுகாதாரத்துறையினர் செய்து வருகின்றனர்.

    தச்சை மண்டலத்திற்கு உட்பட்ட வெள்ளக்கோவில், வண்ணார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தொற்றுபாதித்தவர்களின் வீடுகள் மற்றும் அந்த தெருக்களில் சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டது.
    Next Story
    ×