search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.
    X
    பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம்

    நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கும் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
    நெல்லை:

    பொங்கல் பண்டிகையை யொட்டி சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பயணிகள் நெல்லைக்கு வருகின்றனர்.

    இதனால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கும் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில், மாநகராட்சி நிர்வாகத்துடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இணைந்து கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் வருபவர்களுக்கு புதிய பஸ் நிலையத்தில் உடல் வெப்பநிலை பரிசோதனை, கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்குதல், முகக்கவசம் இல்லாமல் வரும் பயணிகளுக்கு முகக்கவசம் வழங்குதல், தொலைதூர பஸ் களுக்கு கிருமிநாசினி தெளித் தல் உள்ளிட்ட பணி களை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இந்த பணிகளுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. 

    மேலும் நேற்று முதல் வருகிற 18-ந்தேதி வரை வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக தற்காலிக காய்ச்சல் பரிசோதனை மையம் திறக்கப்பட்டு செயல்படுவதாக போக்குவரத்து கழக பொதுமேலாளர் சரவணன் தெரிவித்தார்.
    Next Story
    ×