என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  நெல்லையில் 2 இடங்களில் விபத்து-2 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லையில் இன்று வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துக்களில் சிக்கி 2 பேர் பலியாகினர்.
  நெல்லை:

  தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மாங் கொட்டாரம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 26). 

  இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு மீன் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். பொங்கலை ஒட்டி விடுமுறை அறிவிக்கப் பட்டதால், நேற்று இரவு ரஞ்சித் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினார்.  

  பாளை அருகே உள்ள செங்குளம் அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கீழே கவிழ்ந்தது. இதில் படுகாய மடைந்த ரஞ்சித்தை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 

  அங்கு சிகிச்சை பலனில் லாமல் இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  நாங்குநேரி அருகே உள்ள தெற்கு கரந்தாநேரியைச் சேர்ந்தவர் கோயில் பிச்சை. இவரது மனைவி அமுதா (வயது 58). நேற்று கணவன்- மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் நாங்குனேரி அருகே சென்றனர். அப்போது எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விழுந்தது. 

  இதில் பலத்த காயம் அடைந்த அமுதாவை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித் தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×