search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பொங்கலூர் பகுதியில் நெல் சாகுபடி

    பல மாதங்களாக பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
    பொங்கலூர்:

    பொங்கலூர் வட்டாரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பரவலாக நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. திரும்பிய பக்கமெல்லாம் நெற்பயிர்களாக காட்சியளித்தது. 3 மண்டலமாக இருந்ததை நான்கு மண்டல பாசனமாக மாற்றப்பட்ட பின் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.

    மழையும் அடிக்கடி பொய்த்து போனதால் விவசாயிகள் நெல் சாகுபடியை கைவிட்டனர். நெல் சாகுபடி செய்த நிலங்களில் தக்காளி, வெங்காயம், மக்காச்சோளம் போன்ற மாற்று பயிர் சாகுபடியில் ஈடுபட்டனர்.

    நீண்ட காலத்திற்கு பின் தற்போது தான் நல்ல மழை பெய்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பல மாதங்களாக பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

    மழைநீருடன் கால்வாய் தண்ணீரும் சேர்ந்துள்ளதால் தண்ணீர் உபரியாக உள்ளது. எனவே நெல் சாகுபடியை கைவிட்டிருந்த விவசாயிகள் மீண்டும் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×