search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு பேசிய காட்சி.
    X
    ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு பேசிய காட்சி.

    கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்- நெல்லை கலெக்டர் பேச்சு

    நெல்லை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு, கொரோனா வைரஸ் தொற்று பாதித்து சிகிச்சை பெற வரும் நோயாளிகளை தமிழ்நாடு அரசு வெளியீட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உரிய சிகிச்சை வழங்க வேண்டும். 

    கொரோனா சிகிச்சைக்கு வரும் தகுதியான நபர்களுக்கு முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். 

    மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைக்கேற்ப சரியான முறையில் வழங்க வேண்டும்.  

    கொரோனா நோயாளிகளை தவிர, பிற நோயாளிகளுக்கும்  சிகிச்சை வழங்குவதில் எந்தவித பாதிப்பும் இல்லாதவாறு  தொடர்ந்து  சிகிச்சை நடைபெற வேண்டும். 

    அனுமதிக்கப்பட்டுள்ள  மருத்துவமனையில் மருந்து பொருட்கள், படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் தேவையான அளவு உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும். 

    அரசு வெளியிட்டுள்ள நோய்த்தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் எந்தவிதமான சுணக்கம் ஏற்படாத வண்ணம்  உரிய சிகிச்சை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார்உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×