search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்மொழித் தமிழ் மத்திய நிறுவன புதிய வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி
    X
    செம்மொழித் தமிழ் மத்திய நிறுவன புதிய வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி

    சென்னையில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவன புதிய வளாகம்- பிரதமர் மோடி திறந்து வைத்தார்

    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், பழந்தமிழ் நூல்களை பிற மொழிகளில் மொழிபெயர்த்து தமிழ் மொழியின் செழுமையை உலகறியச் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    சென்னை:

    சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.24.65 கோடி மதிப்பில் 70,000 சதுர அடி பரப்பில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புதிய வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2012-ம் ஆண்டு முதல் தரமணியில் தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு முதல் பணிகள் நடைபெற்றது.

    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் முதுகலை, முனைவர், முனைவர் பட்ட மேலாய்வு உள்ளிட்டவற்றில் செம்மொழித் தமிழைக் கற்கவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும் தேவையான வாய்ப்புகளை உருவாக்குதல், ஆய்வு நூல்களை பதிப்பித்து வெளியிடுதல், பழந்தமிழ் நூல்களை பிற மொழிகளில் மொழிபெயர்த்து தமிழ் மொழியின் செழுமையை உலகறியச் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில், மின்னனு நூலகம், இலக்கியம், மொழியியல், மொழிபெயர்ப்பு, அகராதியியல், நாணயவியல் உள்ளிட்ட 12 புலங்களுடன் புதிய கட்டிடம் தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×