search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

    தென்காசி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டித்து கலெக்டர் கோபாலசுந்தரராஜ் உத்தரவிட்டுள்ளார்.
    தென்காசி:

    தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பிளஸ்-1 முதல் பி.எச்.டி படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்பகல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயினர்கள் ஆகிய மதங்களைச் சார்ந்த மாணவ-மாணவிகளிடமிருந்து 2021-2022 -ஆம் ஆண்டிற்கு ஒன்றிய அரசின் பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் www.scholarships.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்க வருகிற 15-ந்தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×