search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள வாழைத்தார்கள்.
    X
    விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள வாழைத்தார்கள்.

    திருக்காட்டுப்பள்ளி ஏல மையத்தில் வாழைத்தார், கரும்புகள் விற்பனை மந்தம்

    திருக்காட்டுப்பள்ளியில் ஏல மையத்தில் வாழைத்தார், மஞ்சள் கொத்துகள், கரும்புகள் எதிர்பார்த்த அளவில் விலை போகாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    பூதலூர்:

    தமிழர்களின் உணர்வுகளோடு இணைந்த விழா தைப்பொங்கல் 
    திருநாள். இந்நாளில் புத்தரிசியுடன் புதுப்பானையில்பொங்கலிட்டு 
    கரும்பு, வாழைப்பழத்துடன் சூரியனுக்குப் படைத்து வாழ்வு 
    செழிக்க வழிபாடு நடத்துவது வழக்கம்.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள 
    நிலையில் கரும்பு, வாழை தா£¢, மஞ்சள் கொத்து விற்பனை சூடு 
    பிடிக்கத் தொடங்கியுள்ளது. 

    திருக்காட்டுப்பள்ளி காவிரி கரையோர பகுதியில் கரும்பு, வாழை, 
    மஞ்சள் கொத்து ஆகியவை பாரம்பரியமான விவசாயிகள் 
    பயிரிடுவது வழக்கமான ஒன்று.

    திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பயிரிடப்படும் வாழைத்தார் திருக்காட்டுப்பள்ளி சந்தைப் பகுதியில் உள்ள ஏல மையத்தில் 
    வந்து வைத்து ஏலம் விடப்படும்.
    தினந்தோறும் ஏலம் நடைபெறும்.

    ஏலத்தில்அக்கம் பக்கத்துக் கிராமங்களில் இருந்தும் பிற 
    மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாழைத்தார்களை 
    குவியல் குவியலாக ஏலம் எடுத்து செல்வார்கள். இந்த ஆண்டு 
    அதேபோல வாழைத்தார் ஏலம் நடைபெற்று வருகிறது.

    திருக்காட்டுப்பள்ளி ஏல மையத்தில் வளமான பூவன்தார் ரூ.350 
    வரைக்கும் ஏலம் போனது, ரஸ்தாலி ரகம் அதிகபட்சமாக ரூ.600, 
    பச்சை நாடன் அதிகபட்சமாக ரூ.400 ஏலம் போனதாக தெரிவித்தனர். 

    ஏல மையத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்து வைத்த 
    பூவன்தார்கள் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 
    இயற்கையாகவே பழுத்துவிட்ட நிலையில் அவை ஏலம் போகாமல் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

    மஞ்சள் கொத்து ஜோடி ரூ.40க்கு விற்பனையானது.அதேபோல திருக்காட்டுபள்ளி பகுதியில் பயிர் செய்யப்பட்டு இருந்த 
    பொங்கல் கரும்புகள் விவசாயிகள் எதிர்பார்த்த அளவிற்கு விலை போகவில்லை.

    அதிகபட்சமாக 10 கருப்பு கொண்ட கட்டு ரூ.160 முதல் ரூ.170 வரை 
    விலை போனதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    பொங்கல் பரிசாக தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் கரும்பு 
    கட்டு அதிகபட்சமாக 140 ரூபாய்க்கு வாங்கப்பட்டதால், அதை 
    மனதில் வைத்தே வியாபாரிகள் அதிக விலைக்கு கரும்பை 
    கேட்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×