search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ணை பசுமை அங்காடியில் காய்கறி விற்பனை நடந்த காட்சி.
    X
    பண்ணை பசுமை அங்காடியில் காய்கறி விற்பனை நடந்த காட்சி.

    தூத்துக்குடி பண்ணை பசுமை காய்கறி அங்காடியில் விற்பனை மும்முரம்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி பண்ணை பசுமை காய்கறி அங்காடியில் அனைத்து வகையான காய்கறி, கரும்பு மற்றும் பழங்களின் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    தூத்துக்குடி:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி பண்ணை பசுமை காய்கறி அங்காடியில் அனைத்து வகையான காய்கறி, கரும்பு மற்றும் பழங்களின் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    மேலும் விவசாயிகளிட மிருந்து நேரடியாக காய்கறிகள் கொள்முதல் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ள பண்ணை பசுமை காய்கறி அங்காடியானது காய்கறிகள் மற்றும் பழங்களின் விற்பனையில் மக்கள் மத்தியில் மிகுந்த நன்மதிப்பை பெற்று திகழ்ந்து வருகிறது. 

    இங்கு தரமான காய்கறிகள், கீரைகள், பழங்கள்  வெளிசந்தை விலையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மிகவும்  குறைந்த விலையில் அனைத்து தரப்பினரும் வாங்கி மகிழ்ந்திடும் வகையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    காய்கறிகள் மற்றும் பழங்களின் விற்பனையில் தன்னிறைவு பெற்றுள்ளதுடன், மாவட்டத்திலுள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த நற்பெயரினை பெற்று திகழும் பண்ணை பசுமை காய்கறி அங்காடி கடையில் தற்போது பொங்கல் பண்டிகைக்கான காய்கறி மற்றும் பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

    அனைத்து வகையான காய்கறிகளையும் மக்கள் ஒரே இடத்தில் வாங்கிடும் பொருட்டு பல்வேறு பகுதி களில் இருந்தும் அனைத்து வகையான காய்கறிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. 

    அதோடு, பொங்கலுக்கு தேவையான கரும்பு, மஞ்சள் குலை, பனங்கிழங்கு, பொங்கல் பூ உள்ளிட்ட அனைத்தும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

    மேலும், வாடிக்கையாளர்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் எளிதில் வாங்கி சென்றிடும் வகையில் கூடுதல் விற்பனை கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளது. 

    தற்போதுள்ள சூழலில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கடையானது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்கள் வாங்கி செல்லவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    கடைக்கு பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இதனை தவறாமல் கடை பிடித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    சிறப்பு விற்பனைக்கான ஏற்பாடுகளை  தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் சிவமுத்துக்குமரசுவாமி, சரக துணைப்பதிவாளர் ரவீந்திரன் ஆகியோரது ஆலோசனையின் பேரில் சங்க செயலாட்சியர் அந்தோணிபட்டுராஜ், பண்ணை பசுமை காய்கறி அங்காடி பொறுப்பாளர் ராஜதுரை மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×