search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எல்லப்பன்நாயக்கன்குளத்தில் இருந்து தருவைக்குளத்திற்கு தண்ணீர் வரும் காட்சி.
    X
    எல்லப்பன்நாயக்கன்குளத்தில் இருந்து தருவைக்குளத்திற்கு தண்ணீர் வரும் காட்சி.

    குலசேகரன்பட்டினம் தருவைகுளத்திற்கு மீண்டும் தண்ணீர்

    திருச்செந்தூர் அருகே உள்ள எல்லாப்பன் நாயக்கன் குளம் நிறைந்து மறுகால் பாய்ந்து குலசேகரன்பட்டினம் தருவை குளத்திற்கு 20 நாட்களுக்கு பிறகு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது.
    உடன்குடி:

    உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் மெயின்ரோட்டில் தருவைகுளம் உள்ளது. 

    இக்குளம் முழுமையாக நிறைந்து மறுகால் பாய்ந்து தண்ணீர் கருமேனி ஆறு மூலமாக மணப்பாடு கடலில் கலந்து கொண்டு இருந்தது. 

    திருச்செந்தூர் அருகே உள்ள எல்லாப்பன் நாயக்கன் குளம் நிறைந்து மறுகால் பாய்ந்து தருவை குளத்திற்கு தண்ணீர் வரும் அந்த தண்ணீர் திடீரென என நிறுத்தப்பட்டுவிட்டது. 

    இதனால் தருவைகுளத்தில் தேக்கி வைத்த தண்ணீர் குறைந்து கொண்டே வந்தது.
     
    மேலும் உடன்குடி பகுதியில் உள்ள விவசாயிகளும்.ஊர் கூடி ஊரணி அமைப்போம் என்றதொண்டு நிறுவனமும் தருவை குளத்திற்கு மீண்டும் தண்ணீர் விடவேண்டும். 

    தருவை குளத்தில் தேங்கி இருக்கும் தண்ணீர் உப்பாக உள்ளது. உப்புத்தன்மை மாறுவதற்கு தொடர்ந்து தண்ணீர் விடவேண்டும்என்று மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்துவலியுறுத்தி வந்தனர். 

    இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பின்பு எல்லப்பன் நாயக்கன்குளம் மூலம்தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் வேகமாக தருவைகுளம் வந்து கொண்டிருக்கிறது. 
    Next Story
    ×