search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கோவை மாவட்டத்தில் புதிய உச்சம்- கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது

    பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தகுதி உள்ள அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் 3-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தகுதி உள்ள அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளபபட்ட பரிசோதனையில் 863 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

    இதற்கிடையே சுகாதாரத்துறையினர் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து முகாம்களை அமைத்து அங்கு பரிசோதனைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் இன்று காலை தெரிய வந்தது. அதன்படி இன்று காலை 10 மணி நிலவரப்படி கோவையில் 1, 033 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    மதியம் 2 மணியளவில் தான் நேற்று பரிசோதனை செய்யப்பட்ட இறுதி முடிவுகள் வெளியிடப்படும். அப்போது கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×