search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தொட்டது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த 7-ந் தேதி ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று பவுனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 920-க்கு விற்றது. இந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தொட்டது.

    சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.36 ஆயிரத்தை தொட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 500ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.65 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65-க்கு விற்றது.
    Next Story
    ×