search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜல்லிக்கட்டு (கோப்புப்படம்)
    X
    ஜல்லிக்கட்டு (கோப்புப்படம்)

    மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 5,500 பேர் பதிவு

    மதுரை மாவட்டத்தில் 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் குறிப்பிட்ட நாளில் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் பெயர் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை.

    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றான இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை அதன் உரிமையாளர்கள் பல மாதங்களுக்கு முன்பே தயார்படுத்த தொடங்கி விடுவார்கள்.

    மதுரை மாவட்டத்தில் 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் குறிப்பிட்ட நாளில் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் பெயர் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.

    ஆனால் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதற்கு மாற்றாக மதுரை மாவட்ட நிர்வாகம் தனியாக இணையதள முகவரியை ஏற்படுத்தி அதன் மூலம் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வருடத்தில் 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் தொடங்கியது.

    ஷ்ஷ்ஷ்.னீணீபீuக்ஷீணீவீ.ஸீவீநீ.வீஸீ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து வருகிறார்கள். தற்போது வரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 3,900 மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். இதே போல் 1,600 காளை உரிமையாளர்களும் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன் பதிவின் போது மாடுபிடி வீரர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயது சான்றிதழ், 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இவைகளில் ஏதேனும் ஒன்று விடுபட்டால் வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×