search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ்கள்
    X
    பஸ்கள்

    ஊரடங்கு அன்று முன்பதிவு செய்த பயணிகளின் முழு தொகை திரும்ப ஒப்படைக்கப்படும்- போக்குவரத்து துறை

    அரசு பஸ்சில் பயணம் செய்ய வருகிற 16-ந்தேதி அன்று முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு முழு தொகையும் 2 நாளில் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.
    சென்னை:

    முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில், தற்போது, தமிழக அரசு வருகிற 16-ந்தேதி அன்று முழு ஊரடங்கினை அறிவித்துள்ளதால் பொங்கலுக்கு பின்பு வருகிற 16-ந்தேதியிலிருந்து 18-ந்தேதி வரை இயக்குவதாக இருந்த சிறப்புப் பஸ்கள் இயக்கம் வருகிற 17-ந்தேதியிலிருந்து வருகிற 19-ந்தேதி வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    வருகிற 16-ந்தேதி அன்று முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு முழு தொகையும் திரும்ப 2 நாட்களில் கிடைப்பதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் வருகிற 16-ந்தேதி அன்று பயணம் செய்வதை தவிர்த்து மற்ற நாட்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.

    பொங்கலுக்கு பிறகு வருகிற 17-ந்தேதியிலிருந்து 19-ந்தேதி வரை 2 ஆயிரத்து 100 பஸ்கள் வீதம் 6 ஆயிரத்து 300 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்களை பொருத்தவரையில் 17-ந்தேதி 2 ஆயிரத்து 30 பஸ்களும், 18-ந்தேதி 1,358, 19-ந் தேதி 409 ஆக 3 ஆயிரத்து 797 பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 17-ந்தேதி 3 ஆயிரத்து 625, 18-ந்தேதி 1,856,19-ந்தேதி 1,131 இயக்கப்படுகிறது. ஆக மொத்தம் 10 ஆயிரத்து 409 சிறப்பு பஸ்களும், 6 ஆயிரத்து 300 தினசரி இயக்கப்படும் பஸ்கள் உட்பட 16 ஆயிரத்து 709 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பொங்கல் முடிந்து வருகிற 15-ந்தேதி தொலை தூரங்களில் இருந்து சென்னை வரும் பஸ்கள் அனைத்தும், பயணிகள் புறநகர் ரெயில் மூலமாக தங்களுடைய இருப்பிடம் செல்வதற்கு ஏதுவாக தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் பல்லாவரம் வழியாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு போக்குவரத்து துறை அரசு முதன்மைச்செயலாளர் டாக்டர் கே.கோபால் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
    Next Story
    ×