search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பஸ் நிலையத்தில் கூட்டம்
    X
    புதிய பஸ் நிலையத்தில் கூட்டம்

    பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லையில் இருந்து 225 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லையில் இருந்து சென்னை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    நெல்லை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,768 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைத்து பகுதி களில் இருந்தும் சிறப்பு பஸ் கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அரசு போக்குவரத்து கழக நெல்லை கோட்டம் சார்பாகவும் இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நெல்லை கோட்டத்தில் உள்ள நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    நெல்லையில் இருந்து சென்னைக்கு மட்டும் 80 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

    இது தவிர கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருச்செந்தூர் செல்லவும் கூட்டம் அதிகமாக இருந்த தால், நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதுபோல தூத்துக்குடி, தென்காசியிலிருந்து பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்பட பல்வேறு வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.


    நெல்லையிலிருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக தினசரி 25 விரைவு பஸ்கள் சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. 

    பொங்கல் பண்டிகைக்காக அரசு விரைவு போக்கு வரத்துக்கழகத்தில் இருந்து கூடுதலாக 25 சிறப்பு விரைவு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது. இந்த விரைவு பஸ்கள் சென்னை, கோவை, பெங்களூர், நாகப்பட்டினம் உள்பட பல்வேறு முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படுகிறது.

    இந்த பொங்கல் பண்டிகைக் காக மட்டும் நெல்லை அரசு போக்கு வரத்து கழகத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்கள், விரைவு போக்குவரத்து கழகத்தில் இருந்து 25 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 225 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 

    சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய இன்று பிற்பகலில் இருந்து பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. 

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட இன்று பயணிகள் வருகை கூடுதலாக இருந்தது. 

    நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்வதற்கும் கூட்டம் அதிகமாக இருந்தபடியால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு பயணிகள் பஸ்சில் ஏற்றப்பட்டனர். 

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காகவும்,  வெளியூர் செல்வதற்காகவும் இன்று கடும் கூட்டம் அலைமோதியது. 

    இதைத்தொடர்ந்து பஸ் நிலையங்களில் வழக்கத்தை விட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    Next Story
    ×