search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் கோபாலசுந்தர ராஜ் தொடங்கி வைத்த காட்சி.
    X
    பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் கோபாலசுந்தர ராஜ் தொடங்கி வைத்த காட்சி.

    தென்காசி மாவட்டத்தில் 4,038 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

    தென்காசியில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் கோபாலசுந்தரராஜ் தொடங்கி வைத்தார்.
    தென்காசி:

    தமிழகத்தில் 2 தவனை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதை கடந்த இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

    தென்காசி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் நேற்று தொடங்கி வைத்தார். 

    மாவட்டத்தில் மொத்தம் 4,038 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தென்காசி வட்டாரத்தில் அதிகபட்சமாக 986 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.

    முகாமில் மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாதன், செல்லத்துரை, எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா, சதன் திருமலைக்குமார், தனுஷ்குமார் எம்.பி., மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் உதயகிருஷ்ணா, தென்காசி யூனியன் தலைவர்  ஷேக் அப்துல்லா, 

    இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) வெங்கட்ரங்கன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) போஸ்கோராஜ், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், அரசு அலுவலர்கள் உட்பட முன்களப்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×