search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மாவட்டந்தோறும் அதிவிரைவு மீட்பு படகு-அமைச்சரிடம் கோரிக்கை

    தூத்துக்குடியில் மீனவர்களை காப்பாற்ற அதிவிரைவு மீட்பு படகு அமைத்து தர வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மீனவர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு பைபர் மற்றும் கட்டுமர மீனவர் சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தண்டுபத்தில் நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். 

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை முதல் வேம்பார் வரை163.5 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையை கொண்ட பகுதியாகும். பெரிதும் சிறிதுமாக கடற்கரையோரம் 32 மீனவ கிராமங்கள் உள்ளன.

    ஒரு லட்சம் மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலில் செய்துவாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மீனவர் அடை யாள அட்டை பெற பைபர் படகுகளை பதிவு செய்ய, இழப்பீடு பெற போன்றவைகளுக்கு பெரியதாழையில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தூரமுள்ள தூத்துக்குடி உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு தான் செல்ல வேண்டும். 

    இதனால் ஒரு நாள் வருமானம் இழப்பு, காலதாமதம், கூடுதல் செலவு, மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க திருச்செந்தூரில் மீன்வளத் துறை உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்க வேண்டும்.

    இயற்கை சீற்றம், கடல் கொந்தளிப்பு, எந்திரம் பழுது, சுகவீனம் ஏற்படும் போது அவர்களை காப்பாற்ற மாவட்டந்தோறும் அதிவிரைவு மீட்பு படகு, உயிர் மீட்பு அவசர கால படகு போன்றவற்றை வழங்கி இப்படகுகளில்அவசரகால பணியாளர்களாகஅந்தந்த பகுதிகளில் உள்ள தகுதியானவர்களை பணியமர்த்த வேண்டும்.

    தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் சந்தா ரூ.20-ல் இருந்து ரூ.50 ஆகஉயர்த்த வேண்டும். இனி இயற்கை மரணம் அடைந்தால் ரூ 15 ஆயிரம் வழங்குவதை இனி ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும், ஈமச் சடங்குக்கு ரூ.2 ஆயிரத்து 500-க்கு பதில் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். 

    இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர். 

    மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் அதிகாரிகளுடன் கலந்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
    Next Story
    ×