search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தூத்துக்குடியில் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களை கண்காணிக்க கோரிக்கை

    தூத்துக்குடியில் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களை கண்காணிக்க விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவினை அமைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி செயலாளர் வக்கீல் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
     
    தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கருங்குளம், விளாத்திக்குளம், கயத்தாறு, புதூர், தூத்துக்குடி, கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் மானாவாரி விவசாயம் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.  

    இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.  கடந்த சில வருடங்களாகவே இப்பகுதிகளில் இயற்கையின் இடர்பாடுகளால்   விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

     இந்நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரத்தை எடுத்து செல்வதற்காக மானவாரி விவசாய நிலங்களில், விவசாயிகளின் அனுமதியில்லாமல் வழித்தடம் அமைத்து நிலங்களை பாழ்படுத்தி வருகிறது.     

    மேலும்  குளம், குட்டைகளுக்கு மழைநீர் செல்லும் நீர்வழிப்பாதைகளை மண் போட்டு அடைத்து சேதப்படுத்தியும்,   மண் கொட்டி நிரப்பி அழித்தும் வருவது தொடர் கதையாகி விட்டது. 

    இதனால் மழைக்காலங்களில் மழைநீரை சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

    தொடர்ந்து   ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கருங்குளம், தூத்துக்குடி, புதூர், விளாத்திக்குளம், கோவில்பட்டி உள்ளிட்ட பல பகுதியில் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களால் விளை நிலங்கள், குளம், குட்டைகள்  அழிக்கப்பட்டும் வருகிறது.

     இதனை தடுக்க  கலெக்டர் தலைமையில் வேளாண்மைத் துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறையினர் மற்றும் அந்தந்த பகுதிகளிலுள்ள விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவினை உடனடியாக நியமித்து அந்த  குழுவின் மூலமாக அத்துமீறும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களை கண்டறிந்து அவற்றின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்திடவேண்டும். 
       
    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    Next Story
    ×