search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரியில் கொட்டப்படும் பூக்கள்
    X
    ஏரியில் கொட்டப்படும் பூக்கள்

    காரிமங்கலம் பகுதியில் பூக்கள் விலை கடும் சரிவு- ஏரியில் கொட்டப்படும் அவலம்

    பூக்கள் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் மற்றும் பூ சாகுபடி முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.

    காரிமங்கலம் கோவிலூர், பெரியாம்பட்டி மாட்லாம்பட்டி அடிலம் பேகாரஅள்ளி, சிக்கதிம்மனஅள்ளி, திண்டல், முக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூ வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சாகுபடி செய்யும் பூக்கள் ஓசூர், பெங்களூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக பூக்கள் விலை குறைந்து வரும் நிலையில் 2 நாட்களாக பூக்கள் விலை வெகுவாக சரிந்துள்ளது.

    குண்டு மல்லி கனகாம்பரம் ரூ.400 முதல் 450 வரையிலும், காக்கடாபூ ரூ.100 முதல் 150 வரையிலும் பன்னீர் ரோஸ் ரூ.20-க்கும் அரளிப்பூ ரூ.100-க்கும் சாமந்தி 50க்கும், சம்பங்கி 5 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் முழு ஊரடங்கு காரணமாக பூக்களின் விலை வெகுவாக குறைந்துவிட்டது.

    ஓசூர் பெங்களூர் ஆகிய பகுதிகளில் லாக் டவுன் காரணமாக பூ மார்க்கெட் மூடப்பட்டுள்ள நிலையில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக தேங்கியுள்ள பூ வகைகள் வயல்வெளி மற்றும் ஏரிக்கரைகளில் கொட்டப்பட்டு வருகிறது.

    பூக்கள் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×